About the Owner


Recent Post

Pages

Dinamalar

Tuesday, February 14, 2012

குண்டு வெடிக்கப் போவது தெரியும், டில்லியில் என்று தெரியாது!




டில்லியில் இஸ்ரேலிய ராஜதந்திரியின் மனைவிமீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல், “குண்டு வைக்கும் விஷயங்களில் நன்று பயிற்சி பெற்ற ஒருவரால் துல்லியமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார் மத்திய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.







டில்லியில் நடைபெற்ற இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள விதத்தைப் பார்த்தால், ஒரு நாட்டின் உளவுத்துறையின் வேலை இது என்று அடித்துச் சொல்ல முடியும். ஈரானிய உளவுத்துறையின் ஏஜென்டுகள் இந்தியாவுக்குள் ஊடுருவி, இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்பதே, சாத்தியத்துக்குரிய ஊகம்.






ஆனால், அப்படியொரு சாத்தியத்தை மத்திய அரசு ஒப்புக்கொள்ள தயாராக இல்லை.ஈரானுடனோ, இஸ்ரேலுடனோ முரண்பட விரும்பாத காரணத்தால் உட்துறை அமைச்சர் சிதம்பரம், மிக ஜாக்கிரதையாக கருத்து தெரிவித்துள்ளார், “இந்தத் தாக்குதலை இவர்கள்தான் செய்தது என்று எந்தவொரு நாட்டையும் நாம் குற்றம்சாட்ட விரும்பவில்லை. இஸ்ரேலுடன் நாம் சுமுகமான உறவுகளை வைத்திருப்பது போலவே மற்றைய நாடுகளுடனும் உறவுகளை வைத்திருக்கிறோம். எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்தியாவில் பாதுகாப்பாக வசிக்கவும், பணியாற்றவும் முடியும்”






தாக்குதல் எப்படி நடந்தது என்பதை இன்று உறுதி செய்துள்ளார் அவர். “மோட்டார் பைக்கில் வந்த தனி நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இது என்பதை உறுதி செய்திருக்கிறோம். நன்கு பயிற்சி பெற்ற அவர், தன்னிடமிருந்த வெடிகுண்டை இஸ்ரேலிய தூதரக காரில் ஒட்ட வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் குண்டு வெடித்திருக்கிறது”






உளவு வட்டாரத் தகவல்களின்படி, குண்டு வைத்தவர் தனது மோட்டார் சைக்கிளில் டில்லி ட்ராஃபிக்கில் தூதரக காரை சிறிது தொலைவுக்காவது பின்தொடர்ந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. குறிப்பிட்ட காரை பின்தொடர்ந்து அதில் உள்ள நெம்பர் பிளேட் இஸ்ரேலிய தூதரக இலக்கம்தான் என்பதை உறுதி செய்த பின்னரே, காரின் வெளிப்பகுதியில் குண்டை ஒட்ட வைத்திருக்க வேண்டும்.






போட்டார் சைக்களி காரை கடந்து சென்ற சில விநாடிகளில் வெடிகுண்டு காரின் இரும்புப் பகுதியில் ஒட்ட வைக்கப்பட்டது என்பதால், அது ஒரு காந்த வெடிகுண்டாக இருக்க வேண்டும். மோட்டார் சைக்கிள் நபர் முகத்தை முழுமையாக மூடும் வகையில் ஹெல்மெட் அணிந்திருந்தால், அவர் இந்தியரா அல்லது வெளிநாட்டவரா என்பதைகூட அடையாளம் கண்டுகொள்வது கஷ்டம்.






ஈரானிய தலைநகர் டெஹ்ரானில், அணு விஞ்ஞானி ஒருவர் கொல்லப்பட்டதும் இதே பாணியிலான குண்டு வெடிப்பில்தான். அங்கும், விஞ்ஞானி சென்றிருந்த காரை மோட்டார் பைக்கில் பின்தொடர்ந்த ஒருவர் காந்த வெடிகுண்டு ஒன்றை காரின் வெளிப்புறத்தில் ஒட்டவைத்துவிட்டு சென்றதால், விஞ்ஞானி கொல்லப்பட்டார்.






அந்தத் தாக்குதலை இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் செய்தது என்று ஈரானிய பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியிருந்தது.இஸ்ரேலிய உளவுத்துறையின் தலைவர், “ஈரானிய உளவுத்துறையின் ஆட்கள் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக வெடிகுண்டுகளுடன் வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமக்கு உளவுத் தகவல் கிடைத்துள்ளது” என்று கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம்.






ஆனால், டில்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று யாரும் கூறவில்லை!

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)

No comments:

Post a Comment