About the Owner


Recent Post

Pages

Dinamalar

Tuesday, February 14, 2012

வீரபாண்டியை கட்டம் கட்ட முயற்சி: கருணாநிதி கோபம் குறையவில்லை




ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் மோதலை உருவாக்கி
அதன் மூலம் வீரபாண்டி ஆறுமுகம் குளிர்காய்கிறார் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி
கோபமடைந்துள்ளதாக, கட்சியின்
மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும், அவரை சமாதானப்படுத்த கட்சியின்
தலைவர்கள் சிலர் முயற்சித்தும், அவர் சமாதானம் அடையாததால், வீரபாண்டி ஆறுமுகத்தை
கட்சியிலிருந்து நீக்கி, கருணாநிதி
நடவடிக்கை எடுக்கலாம் என, தெரிவிக்கின்றனர்.









அழகிரியின் ஆதரவாளராகக் தன்னைக் காட்டிக் கொண்டு, அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும்
இடையே உள்ள விரிசலை அதிகரித்து, சுயலாபத்திற்கு செயல்படும் வீரபாண்டி ஆறுமுகம் மீது
கருணாநிதி கோபமடைந்துள்ளதாக மூத்த நிர்வாகி தெரிவித்தார். இதுகுறித்து அவர்
கூறுகையில், ""வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எச்சரிக்கை விடுத்து, "முரசொலியில்' வெளியான நோட்டீசை, கருணாநிதியே கைப்பட எழுதிக்
கொடுத்துள்ளார். அந்த அளவுக்கு வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது அவர் கோபத்தில்
உள்ளார்'' என்றார்.
சேலம் மாவட்டத்தில், இளைஞர்
அணிக்கு நிர்வாகிகளை தன்னிச்சையாக வீரபாண்டி ஆறுமுகம் தேர்வு செய்து, கட்சி தலைமையின் கோபத்துக்கு
ஆளாகியுள்ளார். இந்நிலையில், தன்னிடம்
ஒரு வார்த்தை கூட கேட்காமல், எச்சரிக்கை
நோட்டீஸ் வெளியிட்டது, தன்னை
புண்படுத்துவதாக உள்ளது என, அவர்
கூறியது கருணாநிதியை மேலும் கோபப்படுத்தியுள்ளது. தவறு செய்துவிட்டு, கட்சி தலைமையை குற்றம்சாட்டும்
முயற்சியில் வீரபாண்டி ஆறுமுகம் ஈடுபடுவதாக, தி.மு.க., தலைமை கருதுகிறது.








இதுகுறித்து, பெயர் வெளியிடுவதை விரும்பாத தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர்
கூறியதாவது: கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம், ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் கருத்து மோதல்கள்
இருந்தால், அதை
சமாதானப்படுத்த முயற்சித்திருக்க வேண்டும். அதைவிடுத்து, அதை அதிகரித்து, தனக்கு சாதகமாகப் பயன்படுத்த
நினைப்பது, கட்சி
தலைவரின் குடும்பத்துக்குள் மோதலை உருவாக்கும் செயல் என, கருணாநிதியின் குடும்பத்தாரே
எண்ணுகின்றனர். மேலும், அழகிரியை
கொம்பு சீவி விடும் செயலை, வீரபாண்டி
ஆறுமுகம் செய்வதாகவும் அவர்கள் கருதுகின்றனர். கட்சியின் மூத்த தலைவராக வீரபாண்டி
ஆறுமுகம் இருந்தும், அவருடைய
மாவட்டத்தில் அவருக்கு கட்சியினரின் ஆதரவும் இல்லை. பொதுமக்களின் ஆதரவும் இல்லை.
கட்சி தோல்வியடையும் தேர்தல்களில், அவர் வளரவிடாமல் அவர் தடுப்பதே காரணம்.








சேலத்தில் நடந்த ஆறு பேர் கொலை வழக்கில், வீரபாண்டி ஆறுமுகத்தின்
குடும்பத்தின் மீது மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். இந்த வழக்கில், அவருடைய தம்பி மகன் சுரேஷ் கைது
செய்யப்பட்டதற்கு, ஸ்டாலின்
தான் காரணம் என, வீரபாண்டி
ஆறுமுகம் கருதுகிறார். ஆனால், முதல்வராக இருந்த கருணாநிதி தான், சுரேஷ் கைதுக்கு உத்தரவிட்டார்.
ஆறுபேர் கொலை வழக்கால் தான், சேலம்
மாவட்டத்தில் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், கட்சிக்குள் மேலும் பிளவுகளை
ஏற்படுத்தும் வகையில் வீரபாண்டி ஆறுமுகம் செயல்பட்டு வருவது, கட்சி தலைமைக்கு கடும் கோபத்தை
ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












கட்டம் கட்ட முயற்சி: இளைஞர் அணியை சீரமைக்க ஸ்டாலின்
எடுத்துள்ள முயற்சியை சீர்குலைக்கும் வகையில், வீரபாண்டி ஆறுமுகம்
செயல்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துவிட்ட நிலையில், அவருக்கு மன்னிப்பு வழங்குவதை
கட்சி தலைமை விரும்பவில்லை என தெரிகிறது. எனவே, வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது
விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, தி.மு.க.,வினர் எதிர்பார்க்கின்றனர்.




Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)

No comments:

Post a Comment