About the Owner

Recent Post

Pages

Dinamalar

Tuesday, February 14, 2012

பெருகி வரும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கடிவாளம் போடுவது யார்?

சி.பி.எஸ்.இ., பள்ளிகள், கட்டணம், மாணவர் சேர்க்கை
உட்பட அனைத்து விஷயங்களிலும், தங்கள் விருப்பம் போல் செயல்படுவதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் நான்கு வகை பாடத் திட்டங்கள் இருந்த
நிலைமைக்கு,
முற்றுப்புள்ளி
வைத்துள்ளது,
சமச்சீர்
கல்வித் திட்டம். ஆனால்,
பெயரளவில்தான்
சமச்சீர் உள்ளதே தவிர,
பப்ளிக்
ஸ்கூல்,
இன்டர்நேஷனல்
சிலபஸ்,
ஐ.சி.எஸ்.இ., சி.பி.எஸ்.இ., எனும் பல்வேறு
பெயர்களில் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் தொடர்கின்றன. 

கோவையில் கேந்திரிய வித்யாலயா, விமானப்படை பள்ளி, அங்கப்பா
சி.பி.எஸ்.இ.,
பள்ளி
உட்பட பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மூத்த பள்ளிகளை சேர்த்து, கடந்த ஆண்டு வரை, 14 பள்ளிகள் மட்டுமே
இருந்தன. இந்த ஆண்டு,
இன்றைய
தேதி வரை,
இந்த
எண்ணிக்கை,
24 ஆக
உயர்ந்துள்ளது. இதை தவிர,
நடுநிலைப்பள்ளிகளின்
எண்ணிக்கை தனி. சமச்சீர் கல்வி முறை சரியில்லை என்ற, தவறான தகவலை நம்பி, பெற்றோர்
சி.பி.எஸ்.இ.,பள்ளிகள் முன், தவம் 

கிடக்கின்றனர்.
இதனால்,
வரும்
நாட்களில் இப்பள்ளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.நிலைமை
இப்படியிருக்க,
மாணவர்
சேர்க்கை,
கட்டண
நிர்ணயம் ஆகிய விவகாரங்களில், இப்பள்ளி நிர்வாகங்களை கட்டுப்படுத்த
எவருமில்லை. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவுகளுக்கு, இப்பள்ளிகள் பணிவது
கிடையாது. ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் நிர்ணயித்துள்ள புதிய கட்டண
நிர்ணயம்,
மாநிலத்தில்
உள்ள சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளுக்கும்
பொருந்தும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருசில பள்ளிகளைத் தவிர,
மீதமுள்ள
சி.பி.எஸ்.இ.,
பள்ளிகள், அது குறித்தெல்லாம்
கவலைப்படுவதில்லை. 

மூத்தகல்வியாளர் ஒருவர் கூறியதாவது: இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தின்படி,
முன்பு
மாநில பட்டியலில் இருந்த கல்வி, இப்போது பொதுப் பட்டியலின் கீழ், மாற்றப்பட்டுள்ளது.
ஆகவே,
ஒரு
மாநிலத்தில் உள்ள,
அனைத்து
பள்ளி விவகாரங்களும்,
மாநில
கல்வித்துறையின் கீழ்தான் வருகிறது. மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின்
உள்ளூர் அதிகாரி,
அந்தந்த
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்தான். இப்பள்ளிகள் தொடர்பாக ஏற்படும், பிரச்னைகளுக்கு
தீர்வு காண,
சென்னையில்
உள்ள சி.பி.எஸ்.இ.,
மண்டல
அலுவலர் வந்து சேர முடியாது. ஆகவே, மாவட்டங்களில் உள்ள, இப்பள்ளிகளை
வரைமுறைப்படுத்தும் அதிகாரம், மாநில அரசின் கீழ் பணிபுரியும், முதன்மைக் கல்வி
அலுவலருக்குதான்,
வழங்கப்பட
வேண்டும். அதிகரித்து வரும், தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை
கட்டுப்படுத்தும் பொறுப்பை,
கலெக்டர்
மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு வழங்க வேண்டும். அல்லது
மாவட்டந்தோறும் ஆய்வாளர்களை நியமிக்க, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் நடவடிக்கை
எடுக்க வேண்டும்,
என்றார்.

அடுத்த
ஆண்டு படிப்புக்கு இப்போதே விண்ணப்பம்: கோவையில், ஒரு தனியார்
சி.பி.எஸ்.இ.,
பள்ளியில், சமீபத்தில்
பிரி.கே.ஜி.,
வகுப்புக்கு
விண்ணப்பப்படிவம் வழங்கப்போகும் தகவல் அறிந்த பெற்றோர், முந்தைய நாள் பகல் 3.00 மணி முதலே, நீண்ட வரிசையில்
காத்து நின்றனர். இரவில் "ஷிப்ட்' முறையில், ஆள் மாற்றி காத்திருந்து, மறுநாள் காலை 9.00 மணிக்கு படிவம்
வாங்கிச் சென்றனர். 60
சீட்களுக்கு
500க்கும் மேற்பட்டோர்
விண்ணப்பப்படிவம் வாங்கி உள்ளனர். இப்பள்ளியை பிற சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் பின்பற்றி, அதிதீவிர மாணவர்
சேர்க்கையில் இறங்கியுள்ளன.

Email Newsletter

Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)

No comments:

Post a Comment